திருவள்ளூர் மாவட்டம் பெருஞ்சேரியில் நடைபெறும் இந்திய கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ராகுல் காந்தி உரையாற்றியதாவது:-
தமிழ்நாட்டின் மக்களுக்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு.
தமிழ்நாட்டின் மக்கள் மீதும் தமிழ் மீதும் எனது அளவு கடந்த அன்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் எனது குடும்பம் இங்கு இல்லாவிட்டாலும் எனது உணர்வு இங்கு ஒன்றியிருக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
மகளிர் இடஒதுக்கீட்டிற்குப் பின்னால் தொகுதி மறுவரையறையை மறைத்துவைத்து மசோதாவை கொண்டு வந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி செய்த மசோதாவை தோற்கடித்துவிட்டோம்.
அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்தது தான் இந்தியா என்ற நாடு.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசி பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கிறார்.
கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிமை உள்ளது.
தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிக்கிறது. அவர்களால் ஒருபோதும் அதை செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.