File image 
தமிழக செய்திகள்

“கூடுதலாக உழைத்து த.வெ.க.வைப்போல நாங்களும் ஆட்சிக்கு வருவோம்” - அன்புமணி ராமதாஸ்

தவெக மூலம் தமிழ்நாட்டிற்கு நல்ல மாற்றம் வந்துள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா டுடே கான்கிலேவ் நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டுப் பேசினார். அப்போது.,

சாதி கட்சி அல்ல

“பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என முத்திரை குத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சமூக நீதிக்கான கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி 6 இட ஒதுக்கீடுகளை பெற்று கொடுத்துள்ள கட்சி. தொடர்ந்து சமூக நீதிக்காக எங்கள் இயக்கம் போராடி வருகிறது.

இதுபோன்ற கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் கடந்த அறுபது ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி ஆட்சி செய்து வந்தார்கள். அதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் என்பது தமிழ்நாட்டு மக்கள் கலந்த 20 ஆண்டு காலமாக எதிர்பார்த்த ஒரு மாற்றம்.

இந்த மாற்றத்தின் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி போன்ற வர துடிக்கும் புதிய கட்சிகளுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படும் கட்சி

நீங்கள் தமிழ்நாட்டில் எங்கு சென்று யாரை கேட்டாலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு எங்கள் உறுப்பினர்கள் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை கொல்லி விவரங்களோடு எடுத்து பேசி வருகிறார்கள்.

2031-ல் பாடி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நாங்கள் மிகத் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறோம். நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை பிறந்துள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தை பொருத்த வரையில் நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாடு மக்கள் தொகையை பொருத்தவரையில் உலக மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது தனி நாடாக இருந்தால் 25வது பெரிய நாடாக இருந்திருக்கும்.

தொகுதி மறுவரையறையில் பாமக நிலைப்பாடு

நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 39 எம்பிகளுக்கு பதிலாக 59 எம்பிக்கள் கிடைப்பார்கள். இதன் மூலமாக 20 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்லக்கூடிய நல்ல சூழல் உருவாகும். ஆறரை கோடி மக்கள் இருக்கக்கூடிய இங்கிலாந்து நாட்டில் 650 எம்பிக்கள் இருக்கிறார்கள்.

அங்கு ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்ற அடிப்படையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 20 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற நிலை இருக்கிறது. 20 லட்சம் பேருக்கு ஒரு எம்பி எப்படி போதுமானதாக இருக்கும்? சீனாவிலே 3000 எம்பிக்கள் இருக்கும்போது, 145 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய இந்தியாவில் ஏன் 543 எம்பிக்கள் மட்டுமே இருக்க வேண்டும்?

தொகுதி மறுவரையறை என்பது காலத்தின் அவசியம். அது நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வலியுறுத்தல். மேலும் தான் மத்திய அமைச்சராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த அன்புமணி ராமதாஸ், 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தாக குறிப்பிட்டார்.

மீண்டும் மத்திய அமைச்சர்?

“பிரதமர் மோடியிடம் என்னை அடுத்த மத்திய சுகாதார அமைச்சராக்குங்கள் என்று கேட்கிறீர்களா?” என ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்ப, அதற்கு அன்புமணி ராமதாஸ் “இல்லை, இல்லை, அப்படி இல்லை”.. எங்களுடைய இலக்கு தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் 2031-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர என்று நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

அதனால் மத்திய அமைச்சர் பதவி எல்லாம் தேவையில்லை என குறிப்பிட்டார். காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய அன்புமணி, “நாம் அனைவரும் அரசியல் ரீதியாக நண்பர்கள். தண்ணீரை அடிப்படையாக வைத்து கர்நாடகாவையும் தமிழ்நாட்டையும் பிரிக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.