தமிழக செய்திகள்

குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு,விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

கடந்த ஆண்டை விட சுமார் 50 சதவீதம் குறைவு என்றாலும் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் வரும் நாட்களில் கனமழை பெய்து ஏரிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 222 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

ஏரிகள்

குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு,விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தண்ணீர்

எனினும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பாதி அளவே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 738 மி.கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி ஏரிகளில் மொத்த தண்ணீர் இருப்பு 5 ஆயிரத்து 139 மி.கனஅடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 50 சதவீதம் குறைவு என்றாலும் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் வரும் நாட்களில் கனமழை பெய்து ஏரிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை

இதற்கிடையே தற்போது சென்னையில் மெட்ரோ வாட்டர் தினசரி தண்ணீர் வினியோகத்தை 42 மில்லியன் லிட்டர்வரை குறைத்து உள்ளது. தற்போது பருவமழை பெய்து வருவதால் தண்ணீர் வினியோகம் குறைப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பகல் நேர வெப்ப நிலை குறைந்து உள்ளதால் தண்ணீர் தேவையும் குறையும் என்பதால் தினசரி தண்ணீர் வினியோம் குறைக்கப்பட்டு உள்ளது.

புழல் ஏரி

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். ஏரிகளில் தண்ணீர் இருப்பை கண்காணித்து வருகிறோம் என்றனர். இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு அதிகபட்சமாக 1126 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியில் ெமாத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2248 மி.கனஅடி உள்ளது. 68.12 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதேபோல் பூண்டி ஏரிக்கு 520 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 555 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1435 மி.கனஅடியும், பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடியில் 468 மி.கனஅடியும் தண்ணீரு இருப்பு உள்ளது. இதேபோல் வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1463 மி.கனஅடியில் 614 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 340 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT