மேட்டூர் அணை நீர்மட்டம்  
தமிழக செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

காவிரி டெல்டா பாசனம்

அணைக்கு நேற்று வினாடிக்கு 7184 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 5077 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அதே நேரம் அணையின் நீர்மட்டம் 60.12 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 24.77 டி.எம்.சி. தண்ணீர்இருப்பு உள்ளது.

SCROLL FOR NEXT