தமிழக செய்திகள்

தொடரும் சாரல்மழை- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்வு

தமிழக பகுதிக்கு 722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 2538 மி.கனஅடியாக உள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உயர்ந்துள்ளது.

இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து 962 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்து 1206 கனஅடி நீர் வந்தது. இன்று காலை 1440 கனஅடியாக உயர்ந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து பனிமூட்டம் நிலவியதால் மழைப் பொழிவு இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 2538 மி.கனஅடியாக உள்ளது.

மழை

தொடர்மழை காரணமாக வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 52.26 அடியாக உள்ளது. வரத்து 453 கனஅடி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக அணையில் இருந்து 886 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 2302 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என அதன் முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 97 கனஅடி நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 20.63 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. ஆண்டிபட்டி 4.8, பெரியாறு அணை 8, தேக்கடி 5.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT