தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,026 கன அடியாக குறைந்தது

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 2,000 கன அடியாக நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்த அளவில் நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்து அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்து வருகின்றனர்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1,116 கன அடியாக இருந்தது. இன்று சிறிது குறைந்து வினாடிக்கு 1,026 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 61.53 அடியாகவும், நீர் இருப்பு 25.84 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT