தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,582 கன அடியாக குறைந்தது

இன்று காலை 8 மணி அளவில் அணை நீர் மட்டம் 54.62 அடியாகவும், நீர் இருப்பு 20.84 டி.எம்.சி.ஆகவும் இருந்தது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைகிறது.

அதன்படி, நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,590 கன அடியாக இருந்தது. இன்று சற்று குறைந்து வினாடிக்கு 1,582 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை 8 மணி அளவில் அணை நீர் மட்டம் 54.62 அடியாகவும், நீர் இருப்பு 20.84 டி.எம்.சி.ஆகவும் இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT