2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்தும், அதிகரித்தும் காணப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இதே போல் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 763 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 848 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 67.72 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 30.77 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.