காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 2121 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 72 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 34.44 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.