கோடை சீசனை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் குறிப்பாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் கேத்தி- ஊட்டி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும், முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை முன்பதிவு நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாள்தோறும் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.