சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்தி எம்எல்ஏ-ஆக வெற்றி பெற்று புகழடைந்தவர் வி.எஸ்.பாபு.
நீண்ட சுவாச பாதிப்பு காரணமாக செப்டம்பர் 9ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.எஸ்.பாபு இன்று பிற்பகலில் 2.24 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் .வி.எஸ்.பாபு அவர்கள் உடல் நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வி.எஸ்.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.