தமிழக செய்திகள்

வி.எஸ். பாபு மறைவு: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மு.க.ஸ்டாலினை எதிர்த்து, கொளத்தூர் தொகுதியில் வெற்றிப் பெற்றிருந்தார் வி.எஸ்.பாபு.

சென்னை கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு (75), இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

நீண்ட நாட்களாக நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது.

பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT