தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், ஐயுஎம்எல் ஆதரவுடன் 120 இடங்களை எட்டி ஆட்சி அமைத்துள்ளது. இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் மக்களின் முன்பாக கையெழுத்திட்டார்.
அதன்பின் தமிழக மக்கள் முன் பேசினார். அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக நேர்மையான அரசாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
விஜய் முதலமைச்சர் பதவி ஏற்ற நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் அவரது பதவி ஏற்பு விழாவை பார்வையிட பல்வேறு இடங்களில் LED திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் விஜய் பதவி ஏற்பதை பொதுமக்கள், த.வெ.க. தொண்டர்கள் கண்டு ரசித்தனர்.