தமிழக செய்திகள்

உயிர்பெறும் இந்து அடையாளங்கள்..!- முதலமைச்சர் விஜய்க்கு வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு

இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி.

கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி என்று பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி.

மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோயில் என சென்று வழிபட்டு வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT