விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பிறகு, இரண்டு சம்பவங்களிலும் இதுவரை பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.