தமிழ்நாடு செய்திகள்

விருதுநகர் வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.

மாலை மலர்

விருதுநகர் மாவட்டம் கன்னசேரிபுதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பட்டாசு ஆலை வெடி விபத்தில் ராமலட்சுமி பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.