தமிழக செய்திகள்

மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமை: என்.ஆர்.தனபாலன் கண்டனம்

மனித இனத்தையே வெட்கி தலைகுனிய வைத்த செயலாகும்.கலவரம், வன்முறை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

மாலை மலர்

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் தொடர்ந்து நடந்துவரும் கலவரம் மற்றும் கொடூரமான வன்கொடுமைகளுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலவரக்காரர்கள் பழங்குடி இன பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்று வயல்வெளிகளில் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை மனித இனத்தையே வெட்கி தலைகுனிய வைத்த செயலாகும்.

இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காத வண்ணம் கலவரக்காரர்களை இரும்பு கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். கலவரம், வன்முறை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.