விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவர் 2 ஆண்டுகள் முன்னர் சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில காலமாக சரவணன் தனது மனைவி நடத்தையில் சந்தேகத்தில் இருந்துள்ளார். இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இன்றும் (மே 23) இருவரிடையே இதுதொடர்பாக வாக்குவாதம் முற்றவே, கணவன் சரவணன், வீட்டில் இருந்த மின் மோட்டாரை தூக்கி சிவரஞ்சனியின் தலை மேல் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி சிவரஞ்சனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்
இதன்பின் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு போன் செய்து சரவணன் தகவல் அளித்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த மனைவி அருகே சரவணன் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சரவணனை கைது செய்த போலீசார் சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.