திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரக்கத்தண்டலம் கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும், தெருவிளக்கு வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயகுமார், புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரபிரசாத், குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஒரு மாதத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து உள்ளனர்.