தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். வரலாற்றிலேயே முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்பவர் கோட் சூட் அணிவது இதுவே முதல் முறை.
கோட் சூட் உடன் விழா மேடைக்கு விஜய் வந்த உடன் விழாவில் கூடியிருந்தவர்கள் விஜய்.... விஜய்... விஜய் என கூறி ஆர்ப்பரித்தனர். இதனால் விழா அரங்கமே அதிர்ந்தது.
பதவியேற்பு விழா மேடையில், த.வெ.க. தலைவர் விஜய், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அமைச்சரர்களாக பதவியேற்பவர்கள் இடம்பெற்று இருந்தனர்.
அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர்களை ஆளுநருக்கு த.வெ.க. தலைவர் விஜய் அறிமுகம் படுத்தி வைத்தார்.