தமிழக செய்திகள்

"மாறுவேடத்தில் ரவுண்ட்ஸ் செல்லும் முதல்வர் விஜய்?" - த.வெ.க நிர்வாகி

தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆனந்த்ஜீத் இதற்கு புதியதோர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதல்வர் ஆனார். தான் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை விஜய் கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில் தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆனந்த்ஜீத் இதற்கு புதியதோர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, முதல்வர் விஜய் பெரம்பூர்க்கு போகலன்னு நீங்க எல்லாரும் நினைச்சிகிட்டா நாங்க என்ன பண்றது? விஜய் மாறுவேடத்துல எல்லா இடத்துக்கும் போயிட்டு இருக்காரு. பல இடங்களுக்கு அவரு சத்தமில்லாம தான் போயிட்டு இருக்காரு.

எங்க ரோடு சரி இல்லை, எங்க என்ன பிரச்சனை நடக்குதுன்னு விஜய் தனது இந்த ரகசிய விசிட்டுகள் மூலம் துல்லியமாகக் குறித்து வைத்துள்ளார், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.