தமிழக செய்திகள்

ஜெயலலிதா வழியில் சாதாரண தொண்டனையும் எம்.எல்.ஏ.க்களாக உருவாக்கியவர் விஜயகாந்த்

தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.சுதீஷ் இன்று மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Maalaimalar

தஞ்சாவூர்:

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.

இதனை மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். சாதாரண தொண்டையும் மந்திரிகளாக, எம்.பிக்களாக ஆக்கியவர்.

அவரை தொடர்ந்து விஜயகாந்தும் சாதாரண தொண்டர்களை வேட்பாளராக நிறுத்தி எம்.எல்.ஏக்களாக உருவாக்கியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.