தென்னிந்திய திருச்சபை- கன்னியாகுமரிப் பேராயம் 68-வது ஆண்டுவிழா நாள் சிறப்புத் தொழுகை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ. பேராய மண்டல துணைத்தலைவர் கிறிஸ்துதாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். ஜார்ஜ் செலினோ நேட்டோ வேதகமம் வாசித்தார். செயலாளார் பைஜூ நிசித் பால் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் பொதுகூட்டம், சிறப்புத்தொழுகை, பணித்திறன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த 68-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரவீன், செல்லச்சுவாமி, ஆஸ்டின், தளவாய்சுந்தரம், நாகர்கோவில் பொறுப்பு மேயர் மேரி பிரின்ஸி லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்கள். சி.எஸ்.ஐ. பேராய பொருளாளர் ஜெயகர் ஜோசப் நன்றியுரையாற்றினார்.
நிறைவாக ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், திருமண உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் அசோக் சாலமன் உட்பட கன்னியாகுமரி மாவட்ட சபை போதகர்கள், சபை தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி தளாளர்கள், பங்கு பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.