தமிழக செய்திகள்

அகஸ்தீஸ்வரம் ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்- விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு

நிறைவு நாளான 11 ம் திருவிழா அன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம் வரும் நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் இந்து நாடார் சமுதாய வகை அருள்மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட திருக்கோவில்களில் சித்திரைப் பெருந்திருவிழா சித்திரை மாதம் 11-ம் தேதி முதல் 23- வரை (24-04-2026) முதல் (06-05-2026 ) வரை நடைபெறுகிறது.

அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 4:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அம்மனுக்கு தினமு‌ம் சிறப்பு பூஜைகள் பல்வேறு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது . 8 ம் திருவிழா அன்று அம்மன் குதிரையில் பரிவேட்டை செல்லும் நிகழ்வும், நிறைவு நாளான 11 ம் திருவிழா அன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம் வரும் நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

இந்த கொடியேற்ற நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் ஊர் பொதுமக்கள், பக்த கோடிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அறங்காவலர்கள் மணி, கருணாகரன், இராஜா சுந்தரபாண்டியன், சினிவாசன், கோகுலகிருஷ்ணன், பொருளாளர் சுயம்புலிங்கம், கணக்கர் ராஜசேகர், அரோக்கியராஜன், கிங்ஸிலின், அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT