தமிழக செய்திகள்

இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் விஜய்

ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி விஜய் ஆளுநருக்கு மெயில் மூலமாக கடிதம் அனுப்பி இருந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவை யார்-யார் அளிக்கப்போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி விஜய் ஆளுநருக்கு மெயில் மூலமாக கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று பிற்பகலில் சென்னை வர உள்ளார்.

சென்னை வரும் ஆளுநர் அர்லேகர் தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இன்று மாலை விஜய் ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.