தமிழக செய்திகள்

#TVK விருப்பமனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல்

4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை த.வெ.க. பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது.