தமிழக செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி மரியாதை.விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

அதன்படி, த.வெ.க. அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT