தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக விஜய் சென்னையில் இருந்து நாளை தனி விமானம் மூலம் காலை 11 மணி அளவில் திருச்சிக்கு வருவார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மொராய்ஸ் சிட்டி வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு 'ரோடு ஷோ' நடத்தி தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பார். மொராய்ஸ் சிட்டி வளாகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என த.வெ.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், நாளை விஜய் தர்மபுரி மாவட்டத்திற்கு செல்வதால் வேறு தேதியில் திருச்சியில் பிரசாரம் செய்ய அவர் வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை ஜய் பிரசாரம் மேற்கொள்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.