தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சிகளை தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சட்டசபையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற பிறகு, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
விஜய்யை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
வீட்டிற்குள் சென்ற விஜய்யை கையை பிடித்து அழைத்து சென்று மு.க.ஸ்டாலின் உபசரித்தார். இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் பேசினார்.
இதையடுத்து, முதல் அமைச்சர் விஜய்க்கு 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார். திராவிட இயக்கம் குறித்தும் அதுகுறித்த தலைவர்களின் கருத்துக்களும் இப்புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது.