தமிழக செய்திகள்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்கள் கிடைத்தன

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்கள் கிடைத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்தனர். இதனால் 108 + 5 + 2 + 2 என 117 எண்ணிக்கை பெற்றது. விஜய் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதால் 116 எண்ணிக்கை பெற்றது.

நேற்று இந்த எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. விசிக ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முக்கிய பொறுப்பாளர்களுடன் நேற்றில் இருந்து தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று காலை முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை அறிவிக்கப்படவில்லை. மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா விசிக-விடம் இருந்து ஆதரவுக் கடிதத்தை பெற்றார். இதனால் விஜயின் த.வெ.க.-வுக்கு 118 இடம் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களான நடைபெற்று வந்த பரபரப்பு சூழு்நிலை முடிவுக்கு வந்துள்ளது.