தமிழக செய்திகள்

த.வெ.க.வின் சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு

சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

சென்னை:

சென்னை பனையூரில் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையானது சுமார் 1 மணிநேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று த.வெ.க. ஆட்சியமைக்க உள்ள நிலையில், சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.