தமிழக செய்திகள்

அரசியல் கட்சி அறிவிப்பு... விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.கட்சி அறிவிப்பை தொடர்ந்து, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாலை மலர்

காஞ்சிபுரம்:

நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

கட்சி அறிவிப்பை தொடர்ந்து, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யை காண ஒரகடத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.