தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தார்.

அவர் அமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறையில் கமிஷன் பெற்றதாக புகார் எழுந்தது. பணி நியமனத்திற்கும் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் சோதனை நடக்கிறது.

சென்னை உள்பட 13 இடங்களில் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.