தமிழக செய்திகள்

TN Assembly Election | வெற்றி உறுதி..!- வேட்புமனு தாக்கலுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

திமுக கூட்டணி எப்போதும் போல் வலுவாக இருக்கும்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது-

4வது முறையாக கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய வாக்காளர் பெருமக்கள், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக நிற்கப்பட்டிருக்கக்கூடிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் கொளத்தூர் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்.

திமுக கூட்டணி எப்போதும் போல் வலுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.