வேளாண் பட்ஜெட் 
தமிழக செய்திகள்

சிறந்த விவசாயிகளுக்கு வெற்றி விவசாயி, அஞ்சலை அம்மாள், நம்மாழ்வார் விருதுகள் அறிவிப்பு

5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கான விருதுகள் பின்வருமாறு:-

வெற்றி விவசாயி விருது

நெல், சோளம், கம்ப், மக்காசோளம் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு நிலக்கடலை விவசாயத்தில் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.

மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.

மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலை அம்மாள் விருது

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.

அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி செய்வதும், தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும் என்பது பரிசுகளுக்கான தகுதி அளவாகும்.

நம்மாழ்வார் விருது

5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.