தமிழக செய்திகள்

வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும், அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் முதல்வரையே சேரும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றி முன்னமே எதிர்பார்த்தது தான் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் மதுராங்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் சுமார் 14,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை எதிர்த்து வெற்றி பெற்றார்.

இதையடுத்து தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட சத்த்தியபாமா சுமார் 11,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை எதிர்த்து வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் த.வெ.க-வின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக வெற்றி கழக தலைவைரை வாழ்த்துகிறார்கள்.

அவருடைய ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்பதற்கு, இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை என்பது வேறு.

தமிழக வெற்றி கழகத்தை இந்த நாட்டு மக்கள் நம்புகிறார்கள்; முதல்வரின் பின்னால் தமிழகம் இருக்கிறது.

வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும், அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் முதல்வரையே சேரும்.

இந்த தொகுதியில் மக்களில் கோரிக்கை எதுவாக இருந்தாலும், நாங்கள் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்வோம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எப்போதுமே ஆதரவு தந்து கொண்டுதான் இருப்பார்கள், அவர்களுக்கு நன்றி.

SCROLL FOR NEXT