தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடின.
பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.