தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன் அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இருந்தோம். நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு பரிசீலிக்கவில்லை.

மாலை மலர்

சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தி.மு.க. கூட்டணியில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இருந்தோம்.

* நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு பரிசீலிக்கவில்லை.

* தி.மு.க.விடம் த.வா.க. 2 தொகுதிகளை கேட்டது, ஒன்று தான் தருவதாக சொன்னார்கள்.

* தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடந்து வருகிறது.

* அதிகாரிகளின் பேச்சை கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை தி.மு.க. புறக்கணித்திருக்கிறது.

* தி.மு.க. கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர்.

* சினிமா நடிகர் சொன்னதற்காக அவரது தந்தையின் பெயரை தெருவுக்கு வைக்கின்றனர்.

* தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

* ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

* 10 கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.