காய்கறி 
தமிழக செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ 35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் ரூ.40ஆக அதிகரித்து உள்ளது.

தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள், வெங்காயம் உள்ளிட்டவை விலை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட் மற்றும் பீன்ஸ் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

விலை உயர்வு

ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகி வருகிறது. இதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ 35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் ரூ.40ஆக அதிகரித்து உள்ளது.

ஒரு கிலோ ரூ30-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.40-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற மாங்காய் 2மடங்காக அதிகரித்து ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.120-க்கு விற்ற பச்சை பட்டாணி ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.30-க்கு விற்ற பச்சை மிளகாயின் விலையும் 2மடங்காக அதிகரித்து ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கும், ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 வரையும், பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.200-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.