கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் காய்கறி உற்பத்தி வழக்கத்தை விட கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140-க்கும், இஞ்சி கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.65-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 200வரையிலும், இஞ்சி கிலோ ரூ.180வரையிலும், வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்பனை ஆகி வருகிறது.
இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது:- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினசரி 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் காய்கறிகள் கடந்த சில நாட்களாக 400 லாரிகளாக குறைந்து போனது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான காய்கறிகளின் உற்பத்தி குறைந்ததால் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
தக்காளி-ரூ.30,
நாசிக் வெங்காயம்-ரூ.18வரை,
சின்ன வெங்காயம்-ரூ. 40முதல்-ரூ65வரை,
உருளைக்கிழங்கு-ரூ.15,
உஜாலா கத்தரிக்காய் -ரூ35,
முருங்கைக்காய்-ரூ.30,
ஊட்டி கேரட் ரூ.35,
பீட்ரூட்-ரூ.30,
கொத்தவரங்காய் -ரூ40,
புடலங்காய் -ரூ.50,
கோவைக்காய் -ரூ.25,
பாகற்காய் -ரூ.30,
வெண்டைக்காய்-ரூ.60,
சுரக்காய்-ரூ.20,
எழுமிச்சை பழம்-ரூ.150,
வெள்ளரிக்காய்-ரூ.30,
முட்டை கோஸ்-ரூ.30,
இஞ்சி-ரூ.120,
பச்சை மிளகாய் -ரூ.20.