வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்! என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்!
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாற்றுப் பாடமாகத் திகழ்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.