தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது CPI - வீரபாண்டியன் அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது.

கோவை:

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தற்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது என விளக்கம்.

* கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது.

* திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் ஜனநாயக கட்சிகள் என்றார்.

த.வெ.க. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வரும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகியது. சட்டசபை தேர்தல் முடிவுகளக்கு பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.