வீராணம் ஏரி 
தமிழக செய்திகள்

தொடர்ந்து சரிந்து வரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்- சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விடுவதால் அதனை கொண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வந்தனர்.

வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 24 கி.மீ தூரம் பயணம் செய்து தண்ணீர் ஏரியை வந்தடைகிறது.

சிக்கல்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விடுவதால் அதனை கொண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே சிறப்பு கவனம் செலுத்தி கடந்த மாதம் ஆயிரம் கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது தடைப்படாமல் நடைபெற்றது.

தற்போது ஏரியில் 41.25 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தினமும் வினாடிக்கு 73கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.

அந்த தண்ணீரும் போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.