234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.
திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசிகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலை திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திண்டிவனம் (தனி) - வன்னியரசு
பெரியகுளம் (தனி)- சக்திவேல்
கள்ளக்குறிச்சி (தனி)- மாலதி
பண்ருட்டி - அப்துல் ரகுமான்
காட்டுமன்னார்கோவில் (தனி)- திருமாவளவன்
செய்யூர் (தனி)- சிந்தனை செல்வன்
அரக்கோணம் (தனி)- எழில் கரோலின்
திருப்போரூர் - பன்னீர்தாஸ்
சட்டமன்ற உறுறப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பாபு, ஆளுர் ஷா நவாஸ்க்கு தற்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.