பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய திட்ட பணிகளான பழைய பஸ் நிலைய விரிவாக்க பணி மற்றும் புதிய மீன் சந்தை கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி, மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், கட்டுமானத்தின் தரம் மற்றும் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி பணிகள் மேற்கொள்ளப் படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.