காசி தமிழ்ச் சங்கமம் விழா
தமிழக செய்திகள்

வாரணாசியில் 5-வது காசி தமிழ்ச் சங்கமம் விழா: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் இருந்து 1400-க்கும் மேற்பட்டோர் 7 குழுக்களாக பங்கேற்க உள்ளனர்.

5-வது காசி தமிழ்ச் சங்கமம் விழா இன்று தொடங்கி வருகிற டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு- காசி இடையேயான பழைமையான பண்பாடு, கலாசாரம், மொழி, நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காசி தமிழ்ச் சங்கம விழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்த ஆண்டு 5-வது காசி தமிழ்ச் சங்கமம் விழா இன்று தொடங்கி வருகிற டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை இன்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்வின் கருப்பொருளாக ‘திருக்குறள் பயில்வோம்’ என்ற தலைப்பு இடம்பெற்று உள்ளது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளாா்.

விழாவில், தமிழகத்தில் இருந்து 1400-க்கும் மேற்பட்டோர் 7 குழுக்களாக பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் இடம்பெற்று உள்ளார்கள். விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், வேளாண் துறை நிபுணா்கள், கலைஞா்கள், பெண்கள், ஆன்மிகவாதிகள் பங்கேற்கவுள்ளனா்.

திருக்குறளை கற்பிக்கின்றனர்

இவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் 4 நாட்கள் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சிகளிலும், 4 நாட்கள் பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளனர். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், சாரநாத், ராம்நகர் கோட்டை, பாரத மாதா கோவில் ஆகிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கங்கை ஆரத்தி, நீராடுதல், கல்வி சார்ந்த கலந்துரை யாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் உத்தரப்பிர தேசம் சென்று அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிக்க உள்ளனர்.

சிறப்பு ரெயிலில் பயணம்

திருக்குறளின் 1330 குறள்களும் 22 இந்திய மொழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்த விழாவை மத்திய உயா் கல்வி அமைச்சகம், ஐ.ஐ.டி. சென்னை, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மத்திய செம்மொழி நிறுவனம்- சென்னை, தமிழ்நாடு அரசு மற்றும் உத்தர பிரதேச அரசு, மத்திய கலாசார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து நடத்துகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் முதல் குழுவினருக்கான சிறப்பு ரெயில் கடந்த 25-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பனாரஸ் (வாரணாசி) சென்றடைந்தது. 2-வது குழுவினருக்கான சிறப்பு ரெயில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டது.

SCROLL FOR NEXT