தமிழக செய்திகள்

'அமைச்சரவையில் பங்கு' என்பது அரசியல் நிலைப்பாடு - வன்னியரசு விளக்கம்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார். திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.

திருமாவளவனின் வீடியோ பகிரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்தார்.