பா.ஜ.க.-வை பார்த்து அனைத்துக் கட்சிகளும் பயப்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வன்னி அரசு அளித்த பதில் பின்வருமாறு:-
பொதுவாக பாம்புகளை பார்த்தால் எல்லோரும் பயப்படதான் செய்வாங்க என்றார்.
அரசியலில் அதிமுக- திமுக இணைந்து செயல்படலாம் என்று டி.டி.வி. தினகரன் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, அதிமுக- திமுக இணைந்து செயல்படுவதற்கான முன்னெடுப்பதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முன்னதாகவே பேசிக் கொண்டிருந்ததுதான். எந்த எதிர்ப்புல, எந்த பின்னணியில என்பதுதான் முக்கியம். த.வெ.க. எதிர்ப்புக்காக ஒன்று சேர்கிறார்கள் என்றால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அதிமுக கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டு கட்சிகளும் இணைவதற்கான இலக்கு என்ன? என்பதுதான் டி.டி.வி. தினகரன் முன் நான் வைக்கப்படும் கேள்வி. த.வெ.க.-வை எதிர்க்க ஒன்றிணைவது என்றால் இதைவிட மோசமான முன்னெடுப்பு ஏதும் இருக்க முடியாது.
பாஜக-வை எதிர்ப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு, சங்பரிவாரை எதிர்ப்பதற்கு என்றால் சரி. கோட்பாடு அடிப்படையில் சரி. மற்றபடி பேசுவது மோசமான முன்னெடுப்பு ஆகும்.
இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தி.மு.க., அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க இருந்தார்கள் என்றும், இருவரும் கூட்டு களவாணிகள் என்கிறார். நீங்கள் செய்திருப்பது களவாணி வேலைதான். தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை பெற்று அமைச்சரவையில் இடம் கொடுத்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். 6 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததும் களவாணித்தனம் தான்.
டாக் லெஸ் ஒர்க் மோர் என்று அவரைப் பார்த்து நாம் சொல்ல வேண்டும். ரீல் விடுவதை நிறுத்துங்கள். ரீல் வீட்டு ஆட்சிக்கு வந்தீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களை விட பெரிய ஜாம்பவான்களே பார்த்தவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள்.
பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக த.வெ.க.- தி.மு.க. ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் அறிக்கையாக பார்க்கிறேன். அதே போன்றுதான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டால் அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும்.
கடந்த காலங்களில் அண்ணாவும், ராஜாஜியும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். இது போன்ற பல முன் உதாரணங்கள் உள்ளது. இது நடக்குமா? நடக்க கூடாதா? என தெரியாது. தி.மு.க. கூட்டணியை ஜெயித்தவர்களை தன் பக்கம் இழுத்து த.வெ.க.வை ஆட்சி அமைத்தது நியாயம் என்றால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியும் நியாயம்தான்.
த.வெ.க.வை வீழ்த்த தி.மு.க., அ.தி.மு.க. இணைந்து வியூகம் அமைப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் சூழல்தான் இதை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சனாதனத்தை பேசும் திருமாவளவன் கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு எதற்கு செல்கிறார் என கேட்கிறார்கள். அவர்களுக்கு அது தெரியாது, திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள்
தேர்தலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்டதை பற்றி ஏன் யாரும் விவாதம் நடத்தவில்லை. ஆனால் திருமாவளவன் தி.மு.க.வுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள்.
தி.மு.க. தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை, அதைவிட அ.தி.மு.க. கண் முன்னரே சிதைத்து விடுகிறார்கள் என்பது ஒரு கவலை. திராவிட கட்சிகளை ஒதுக்கிவிட வேண்டும் என பெரியார் காலத்தில் இருந்து ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனக்கு தனிப்பட்ட முறையில் பா.ஜனதா மீது எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் கருத்தியல் என்பது வேறு.
எனது பிறந்தநாளில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் ரெயில்வே மந்திரி அஷ்வின் வைபவ் இருவரும் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. காலத்தில் இருந்து ஒரு கட்சியில் இருந்து மறு கட்சி பேசுவது வழக்கம் கொள்வது என்பது கிடையாது. அந்த மரபை உடைத்தவன்தான் திருமாவளவன்.
தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் ஒரே எதிர் பா.ஜ.க. தான். கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரஸும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது?
இவ்வாறு அவர் பேசினார்.