வண்டலூர் பூங்கா 
தமிழக செய்திகள்

பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று: வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்களுக்கு மூடல்

பொதுமக்கள் பூங்கா நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைகளுக்கு (எச்5என்1) காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதால், 2 நாட்களுக்கு பூங்கா மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு, (எச்5என்1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்க்கத் தடை செய்யப்பட்டு மூடப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் பூங்கா நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT