தமிழக செய்திகள்

வெளிமான் சரணாலயத்தில் குட்டைகள் வறண்டதால் வனவிலங்குகள் அவதி

ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டத்தின் அளவும் குறைந்து விட்டது. இதனால் மான்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் தண்ணீர் தேடி வெளியேறும் நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டத்தின் அளவும் குறைந்து விட்டது. இதனால் மான்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் தண்ணீர் தேடி வெளியேறும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையிலும், மான் மற்றும் வன உயிரினங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையோரம் வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம் அமைந்து ள்ளது . 2054.85 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த வல்லநாடு மலைப்பகுதியானது 1891-ம் ஆண்டு வல்லநாடு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டு, பின்னர் வல்லநாடு வெளிமான்கள் சரணாலயமாக 1987-ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டி வதைக்கும் வெயில்

இந்த வல்லநாடு வெளிமான்கள் சரணாலயத்தில் 300 வெளிமான்கள், 300 புள்ளிமான்கள், 150 கடமான்கள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நரி, குள்ளநரி, எறும்புத்திண்ணி, முயல், முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும், நூற்றுக்கணக்கான பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், ஆயிரக்கணக்கான வண்டுகளும், பூச்சிகளும் வாழக்கூடிய மிக முக்கியமான சூழலியல் மண்டலமாக திகழ்கிறது.

வெளிமான்கள் சரணாலயம்

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல நாட்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் வாட்டுகிறது. இதன் காரணமாக வல்லநாடு வெளிமான்கள் சரணாலயத்தில் உள்ள தண்ணீர் குட்டைகள் அனைத்தும் வறண்டு விட்டது.

வனத்துறை நடவடிக்கை

மேலும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டத்தின் அளவும் குறைந்து விட்டது. இதனால் மான்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் தண்ணீர் தேடி வெளியேறும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையிலும், மான் மற்றும் வன உயிரினங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

வல்லநாடு

டேங்கர் வாகனம் மூலமாக வெளிப்பகுதியில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு வல்லநாடு காப்புக்காட்டில் உள்ள நீர் தொட்டிகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளில் வனப்பணியாளர்கள் மூலமாக நீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் 2 நாட்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆழ்துளை கிணறுகளில் இருந்து சோலார் மூலமாகவும் தண்ணீர் எடுக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை நல ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT